உலகின் மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனமான google நிறுவனத்தின் 2022 ஆண்டிற்கான Annual Developer Conference வருடந்தோறும் நடைபெறும்,அந்த நிகழ்வில்  கூகிள் தங்களுடைய புதிய தொழிநுட்பங்கள், புதிய Products எல்லாம் அறிமுகம் செய்யும்.

அதேபோலவே  இந்த வருடமும் நடைபெற்றது அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சைதான் நிகழ்வை முதலில் தொகுத்து வழங்கினார், இப்பொழுது  என்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என  பார்ப்போம்..

1. Google Map

நாம் எல்லாரும் அதிகம் பயன்படுத்தும் google Mapல்  ஒரு குறிப்பிட்டதக்க Updates கொண்டு வந்துள்ளார்கள், அதாவது 3D Mapping இன்னும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை கொண்டு mapல்  இன்னும் அதிகமான இடங்களை கொண்டு வந்துள்ளார்கள்.  எப்படி என்றால்  ஒரு இடத்தை தேடும் பொது அந்த இடம் மக்கள் அதிகம் வரும்  இடமாக  இருந்தல் உடனே உங்களுக்கு அந்த இடம் தெளிவாக தெரியும், பக்கத்தில்  உள்ள சின்ன சின்ன இடங்கள் சரியா தெரியாது ஆனால்  இப்பொழுது  அந்த சின்ன சின்ன கட்டிடங்கள் எல்லாம் தெரியக்கூடியது  போல்  கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  Europe ல்  Eco Friendly Driving  நீங்கள்  எதாவது ஒரு இடத்துக்கு செல்லும் போது இரண்டு வழிகள் உங்களுக்கு Map ல்  Show ஆகும் அதுல உங்க Fuel Consume பண்றது போல route அதை தேர்வு செய்து உங்கள் எரிபொருளை மிச்சம் செய்து கொள்ளலாம்.

2.Pixel Watch And New Pixel Phone

கூகிள் நிறுவனம் தங்களுடைய  முதல் Pixel Watch வெளியிட்டுள்ளது, இதுல ஏராளமான Features அறிமுகப்படுத்தியுள்ளது  உதாரணமாக  உங்களோட Phone Connectivity இல்லாமல்  Map access பண்ணலாம் மற்றும்  Google Wallet எல்லாம் பயன்படுத்தலாம்.

3.Pixel Smartphones 6a, 7 பிறகு 7 Pro போன்ற புதிய Smartphones அறிமுகப்படுத்தியுள்ளது  எல்லாமே 5ஜி தொழில்நுட்பங்களுடையது. மற்றும்  அவர்களுடைய  தயாரிப்புகளில்  அதிகம் Recycled பொருட்களை பயன்படுத்தி  தயாரித்து இருப்பதாக கூறியுள்ளது.

4.Pixel Buds

அடுத்து Pixel Buds ஐ அறிமுகம் செய்துள்ளது  Active Noise Cancellation, Multi Connectivity இன்னும் ஏராளமான வசதிகளோடு இதனை  அறிமுகம் செய்துள்ளது 

5.My Ad Center

பயனாளர்கள் தங்களுக்கு வரும் Ads Control பண்ணும்  விதமாக My Ad Center இணை  அறிமுகம் செய்துள்ளது  இதன் மூலம் தங்களுக்கு வர கூடிய ads ல்  தங்களுக்கு விருப்பமான  Brands களில் இருந்து அதிகம் Ads வருவது போல மாற்றிகொள்ள முடியும் அதேபோல தேவையில்லாத Ads தங்களோட Category ல் இருந்து நீக்கவும் முடியும்.

6.Google Wallets

தங்களுடைய முக்கியமான அடையாள ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு  Google My Wallet ஐ அறிமுகம் செய்துள்ளது  இதை கொண்டு நாம்  எல்லா இடங்களிலும் கூகிள் Pay உதவியோடு Transaction பண்ண முடியும்.

7.AR Glass

கூகிள் புதிதாக Ar Glass ஒன்றையும்  அறிமுகப்படுத்தியுள்ளது  இது காது கேளாதவர்கள், மற்றும்  பிற மொழிகள் அறியாதவர்களுக்கு இது பெரிதும்  உதவும் என கூறப்படுகிறது.  எப்படி என்றால்  எதிரில் உள்ள நபர் உங்களிடம் ஆங்கில மொழியில் பேசுவார்களாயினும்  உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது எனனின். இப்பொழுது  நீங்கள்  அந்த AR Glass அணிந்திருந்தீர்கள் என்றால்  உங்களுக்கு அவர் பேசுறது எல்லாமே உங்களுக்கு தெரிந்த மொழியில Translate செய்யப்பட்டு Subtitles போல வரும் இதை கொண்டு நீங்க எளிமையாக அறிந்து கொள்ளலாம்.